கொரோனா ஊரடங்கால் பக்தர்களின் வருகை குறைவு: ஏழுமலையான் கோவிலில் சிறப்பு தரிசன டிக்கெட் 5ஆயிரமாக குறைப்பு

0 2548

கொரோனா ஊரடங்கு காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 300ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் 15ஆயிரத்தில் இருந்து 5 ஆயிரமாக குறைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தற்போது ஆந்திர மாநிலத்தில் பகல்நேர ஊரடங்கு அமலில் இருப்பதாலும், தமிழ்நாடு உள்ளிட்ட பக்கத்து மாநிலங்களில் முழு நேர ஊரடங்கு அமலில் இருப்பதாலும் பக்தர்களின் எண்ணிக்கை தினமும் குறைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை கருத்தில் கொண்டு இந்த மாதத்திற்கான 300 ரூபாய்  சிறப்பு தரிசன டிக்கெட் 5 ஆயிரமாக குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments