தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் காரணமாக 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் ஆல் பாஸ்

0 2628

தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் காரணமாக பள்ளிகள் தொடர்ந்து செயல்படாமல் இருந்து வருகிறது.

இதனால் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடத்துவது குறித்து கல்வித்துறை தீவிர ஆலோசனையில் உள்ளது. இந்நிலையில் தற்போது தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும் 1 ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவர்களுக்கும் தேர்வின்றி ஆல் பாஸ் வழங்குவதாக தொடக்க கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது.

மாணவர்களை பள்ளியிலிருந்து வெளியேற்றாமல், அனைவருக்கும் தேர்ச்சியை பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments