பிரதமர் மோடியிடம் 6 வயது சிறுமி புகார் அளித்ததன் எதிரொலி... காஷ்மீரில் ஆன்லைன் வகுப்புகளுக்கு நேரக்கட்டுப்பாடு அறிவிப்பு

0 8917

ஆன்லைன் வகுப்பு குறித்து பிரதமர் மோடியிடம் 6வயது சிறுமி புகார் அளித்ததன் அடிப்படையில் அங்கு ஆன்லைன் வகுப்புகளுக்கு நேரக்கட்டுப்பாடு தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மாநில நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், தொடக்கக்கல்விக்கு முந்தைய வகுப்பு மாணவர்களுக்கு தினமும் அரை மணி நேரமும், தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு ஒன்றரை மணி நேரமும் ஒதுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு 3 மணி நேரத்துக்கு மிகாமலும் வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments