ஒவ்வொரு நாட்டின் இறையாண்மையையும் எல்லை வரையறையையும் உலக நாடுகள் மதிக்க வேண்டும்: அமைச்சர் ஜெய்சங்கர்

0 2023

ஒவ்வொரு நாட்டின் இறையாண்மையையும் எல்லை வரையறையையும் உலக நாடுகள் மதிக்க வேண்டும் என, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வலியுறுத்தியுள்ளார்.

பிரிக்ஸ் நாட்டு கூட்டமைப்பின் மாநாட்டில்  உரை நிகழ்த்திய ஜெய்சங்கர் இவ்வாறு கூறியுள்ளார். ஐ.நா. வழிகாட்டலின் படி அமைக்கப்பட்ட ஒரே சர்வதேச சட்டம் தான் அனைத்து நாடுகளுக்கும் பொருந்தும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். சீனா வெளியுறவு அமைச்சர் வாங்-யீ உள்ளிட்டோர் இந்த காணொலி உரையின் போது மாநாட்டில் பங்கேற்றனர்.

பிரிக்ஸ் நாடுகளின் கூட்டமைப்பும் அனைத்து நாடுகளை சமமாக மதித்து அவற்றின் எல்லை வரையறைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் ஜெய்சங்கர் வலியுறுத்தினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments