தப்பிய கைதிகளுக்கு மாவுக்கட்டு போட்ட போலீஸ்..! சமாதான வீடியோ அனுப்பியும் உக்கிரம்

0 6048
தப்பிய கைதிகளுக்கு மாவுக்கட்டு போட்ட போலீஸ்..! சமாதான வீடியோ அனுப்பியும் உக்கிரம்

சென்னை வியாசர்பாடி காவல் நிலையத்தில் போலீசாரை தாக்கி விட்டு தப்பிச்சென்ற கைதிகள் இருவருக்கு போலீசார் மாவுக்கட்டு போட்டுள்ளனர். சமாதானம் பேசி வீடியோ அனுப்பிய நிலையிலும் உக்கிரம் குறையாத போலீஸ் ட்ரீட் மெண்ட் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.

சென்னை வியாசர்பாடி காவல் நிலையத்தில் இருந்து அஜய் புத்தா, கிட்டா அஜீத், ஜெகதீஷ்வரன் ஆகிய 3 விசாரணை கைதிகளும் போலீசாரை தாக்கிவிட்டு தப்பிச் சென்றனர்.

ஜெகதீஷ்வரன் காவல் நிலையத்தில் சரணடைந்த நிலையில் திருமுல்லைவாயல் பகுதியில் பதுங்கி இருந்த அஜய் புத்தா, வீட்டிலிருந்த தன்னை 110 வழக்கு போட்டு விடுவதாக சத்தியம் செய்து அழைத்து வந்த போலீசார், குண்டர் தடுப்புச்சட்டத்தில் அடைக்க முடிவு செய்ததால் , கண்ணாடியால் கையை அறுத்துக் கொண்டு போலீஸ் நிலையத்தில் இருந்து தப்பி வந்ததாக தன்னிலை விளக்க வீடியோ ஒன்றை வெளியிட்டு போலீசார் அடிக்காவிட்டால் சரணைகிறேன் என்று வழக்கறிஞர் மூலம் சமாதானம் பேசி உள்ளார்.

போலீசை தாக்கி விட்டு தப்பியவர்களை நாங்களே கைது செய்வோம் என்று களமிறங்கிய காவல்துறையினர் அஜய் புத்தாவின் உறவுக்கார பெண் ஒருவரை பிடித்து அவர் மூலமாக அஜய் புத்தாவை கைது செய்து அழைத்துச்சென்றுள்ளனர். இந்த நிலையில் அஜய் புத்தா தங்களிடம் இருந்து தப்பிக்க முயன்றபோது கைகால் முறிந்து விட்டது எனக்கூறி மாவுக்கட்டு போட்டு நீதிமன்ரத்தில் ஆஜர் படுத்தியுள்ளனர்.

அதே போல ஸ்பிரிங் முடியுடன் போலீசில் இருந்து தப்பிய கிட்ட அஜீத், அடையாளம் தெரியக்கூடாது என்பதற்காக தலையை மொட்டையடித்துக் கொண்டு தலைமறைவாக பதுங்கி இருக்க திட்டமிட்ட நிலையில் , அவனது உறவினர் மூலம் அவன் இருக்குமிடத்தை கண்டுபிடித்து சுற்றிவளைத்து கைது செய்துள்ளனர். அஜய் புத்தாவை போலவே அவனும் தப்பி ஓடும் போது இடறி விழுந்து கைமுறிந்ததாக கூறி மாவுக்கட்டு போட்டுள்ளனர்.

காவல் நிலையத்தில் இருந்து தப்பித்து சென்னை பெருநகர போலீசுக்கு சவாலாக மாறியதால், ஆத்திரத்தில் இருந்த போலீசார் உக்கிரம் குறையாமல், இரு ரவுடிகளையும் மாவுக்கட்டுடன் ஷாக்ட்ரீட் மெண்ட் கொடுத்து ஜெயிலுக்கு அனுப்பியுள்ளது குறிப்பிடதக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments