முன்னாள் அமைச்சர் மீதான நடிகையின் புகார்... போலீஸ் கையில் சிக்கிய ஆடியோ?

0 8394
முன்னாள் அமைச்சர் மீதான நடிகையின் புகார்... போலீஸ் கையில் சிக்கிய ஆடியோ?

நடிகை கொடுத்த பாலியல் புகாரில் முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு எதிராக போலீசார் ஆதாரங்களை திரட்டி வருவதாக கூறப்படும் நிலையில், தனக்கு கருக்கலைப்பு செய்த தனியார் மருத்துவமனை மருத்துவரிடம் நடிகை அழுதுக் கொண்டே பேசியதாக கூறப்படும் ஆடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் மணிகண்டன், தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி 5 ஆண்டுகளாக குடும்பம் நடத்திவிட்டு ஏமாற்றியதாகவும் 3 முறை கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு செய்ய வைத்து விட்டதாகவும் நடிகை அளித்த புகாரில், மணிகண்டன் மீது பாலியல் வன்கொடுமை, கட்டாயக் கருக்கலைப்பு, கொலை மிரட்டல், நம்பிக்கை மோசடி உள்ளிட்ட ஆறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

கோபாலபுரத்தில் உள்ள லைப்மெட் மருத்துவமனையில் கருக்கலைப்பு செய்ததாக நடிகை தரப்பில் ஏற்கனவே, காவல்துறையிடம் ஆதாரங்கள் என்று சில ஆவணங்கள் கொடுக்கப்பட்டிருந்தது. அந்த மருத்துவமனையின் மருத்துவர் அருண்குமார், முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு நெருங்கிய நண்பர் என்றும் நடிகை கூறியிருந்தார். இந்த நிலையில் மருத்துவர் அருண்குமாருடன் நடிகை பேசியதாக கூறப்படும் ஆடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

சுமார் 20 நிமிட ஆடியோவில், மணிகண்டன் தன்னை அடித்து துன்புறுத்தியதால் உடலெங்கும் காயம் ஏற்பட்டுள்ளதாக நடிகை புலம்புவது போன்ற உரையாடலும், இது குறித்து மணிகண்டனிடம் தாம் பேசுவதாக அந்த மருத்துவர் கூறுவது போன்ற உரையாடலும் இடம்பெற்றுள்ளன.

இந்த செல்போன் உரையாடலை கைப்பற்றியுள்ள போலீசார், அதில் பேசியதாக கூறப்படும் மணிகண்டனின் நண்பரான மருத்துவர் அருண்குமாரை சம்மன் அனுப்பி விசாரிக்க திட்டமிட்டுள்ளனர். பெண்ணின் அனுமதி இல்லாமல் கட்டாயப்படுத்தி கருகலைப்பு செய்வது இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றம் ஆகும். 10 வருடம் சிறைத் தண்டனை வழங்க வழி செய்யும் இச்சட்டத்தில், கருக்கலைப்புக்கு உடந்தையாக செயல்பட்டது உறுதியானால் மருத்துவருக்கும் சிக்கல் ஏற்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, தன் கணவர் மீது அவதூறு புகார் அளித்துள்ளதாக நடிகை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் மனைவி வசந்தி ராமநாதபுரம் எஸ்.பி. அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments