ரூ.28 லட்சத்தை இடுப்பில் கட்டி கடத்திவந்த இளைஞர்... எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க பாருங்க

0 9000

ஆந்திராவிலிருந்து சென்னைக்கு 28 லட்ச ரூபாயை உடலில் சுற்றி கொண்டு வந்த இளைஞரை பிடித்த ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர்.

ரயிலில் மதுபானங்கள் கடத்திவருவதை தடுக்க சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில், ரயில்வே பாதுகாப்புப்படை போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஹைதரபாத் ரயிலில் வந்த இளைஞரிடம் நடத்தப்பட்ட சோதனையில், அவர் தன் வயிற்று பகுதியில் 28 லட்ச ரூபாய் பணத்தை பையில் மறைத்து வைத்து கொண்டுவந்தது தெரியவந்தது.

விசாரணையில் அவர் குண்டூரை சேர்ந்த கோணகண்டியா சந்திரசேகர் என்பது தெரியவந்தது. உரிய ஆவணங்கள் இல்லாததால் பறிமுதல் செய்யப்பட்ட பணம் வருமான வரித்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments