கொரோனா தடுப்பு மருந்துகளை கலந்து பயன்படுத்துவது பாதுகாப்பானதா? இந்தியாவில் ஆய்வு

0 1783

கொரோனா தடுப்பு மருந்துகளை கலந்து பயன்படுத்துவது பாதுகாப்பானதா, நோய்தொற்றை தடுப்பதில் திறனுள்ளதாக இருக்குமா என இந்தியாவில் ஆய்வு  நடைபெற உள்ளது.

ஃபைசர் மற்றும் அஸ்ட்ராஜெனேக்கா தடுப்பு மருந்துகளை கலந்து பயன்படுத்துவது பாதுகாப்பானதா, நோய்எதிர்ப்பு சக்தியை தூண்டுமா என இங்கிலாந்து மற்றும் ஸ்பெயினில் சில ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இந்தியாவைப் பொறுத்தவரை ஆய்வுகளோ உரிய ஆதாரங்களோ இன்றி இதை செயல்படுத்த முடியாது என்பதால், மருத்துவரீதியாக பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தடுப்பு மருந்து தயாரிப்பாளர்களுடன் இணைந்து, மத்திய அரசு விரைவில் தொடங்க உள்ள இந்த ஆய்வு, 2 மாதங்களுக்கு நடைபெறும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் அனுமதி வழங்கப்பட்டுள்ள கோவேக்சின், கோவிஷீல்டு, ஸ்புட்னிக்-வி தடுப்பு மருந்துகளை பயன்படுத்தி இந்த ஆய்வு நடைபெறும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments