2DG மருந்தை பயன்படுத்துவது குறித்து டிஆர்டிஓ அறிவிப்பு

0 4417

2DG  மருந்தை பயன்படுத்துவது குறித்த விளக்கத்தை  டிஆர்டிஓ வெளியிட்டுள்ளது.

அதன்படி,கொரோனா சிகிச்சையில், மருத்துவமனைகளில் மட்டுமே அது ஒரு இணை மருந்தாக வழங்கப்பட வேண்டும். மிதமானது முதல் தீவிரமான தொற்று உள்ளவர்களுக்கு எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் இந்த மருந்தை அதிகபட்சம் 10 நாட்களுக்கு மட்டும் வழங்கலாம்.

கட்டுப்பாட்டில் இல்லாத சர்க்கரை நோய்,தீவிர இருதய நோய், கல்லீரல் மற்றும் சிறுநீரக நோய்  உள்ளவர்களுக்கு  2DG ஐ வழங்குவது பற்றி எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், 18 வயதுக்கு குறைவானவர்களுக்கு இந்த மருந்தை வழங்க கூடாது. இந்த மருந்து தேவைப்படும் மருத்துவமனைகள் 2DG@drreddys.com என்ற மின்னஞ்சல் வாயிலாக தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம் எனவும் டிஆர்டிஓ தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments