"சரக்கு" என்ற பெயரில் வாட்ஸ் அப் குழு மூலம் சட்டவிரோத மது விற்பனை - 2 பேர் கைது

0 3514

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் வாட்ஸ்அப் குழு மூலம் மது விற்பனை செய்த புகாரில் இருவரை போலீசார் கைது செய்தனர்.

ஊரடங்கு காரணமாக கடந்த 10ஆம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ள நிலையில், கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெறுவதை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, வாணியம்பாடியில் "சரக்கு" என்ற பெயரில் வாட்ஸ்அப் குழு ஏற்படுத்தி,  ஆர்டர்கள் பெறப்பட்டு மதுபாட்டில்கள் டோர் டெலிவரி செய்யப்படுவதாக புகார் எழுந்தது.

இதுதொடர்பாக கடந்த வாரம் 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்நிலையில் இச்சம்பவத்தில் தொடர்புடைய இருவரை மதுபாட்டில்கள் மற்றும் சாராய பாக்கெட்டுகளுடன்  போலீசார் கைது செய்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments