பத்ம சேஷாத்ரி பாலபவன் பள்ளி ஆசிரியர் ராஜகோபாலனுக்கு 3 நாள் போலீஸ் காவல்

0 1480

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைதான பிஎஸ்பிபி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலனை 3 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சென்னை போக்சா சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை பிஎஸ்பிபி பள்ளியின் வணிகவியல் ஆசியரரான ராஜகோபால், அங்கு பயின்ற மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கடந்த 24 ஆம் தேதி கைது செய்யப்பட்டான். ராஜகோபலனை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சென்னை போக்சா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யபட்டது.

வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தீவிரமான குற்றச்சாட்டு உள்ளதால் அது குறித்து விசாரிக்க 5 நாட்களுக்கு அனுமதிக்க வேண்டும் என காவல்துறை தரப்பில் வாதிடப்பட்டது.  இதனையடுத்து ராஜகோபாலனை 3 நாள் காவல்துறை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து நீதிபதி உத்தரவிட்டார். ராஜகோபாலனின் ஜாமீன் கோரிய மனு வரும் 3 ஆம் தேதி  விசாரணைக்கு வரவுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments