ரஷ்யாவில் இருந்து ஐதராபாத் வந்து சேர்ந்தன சுமார் 30 லட்சம் டோஸ்கள் அடங்கிய ஸ்புட்னிக் தடுப்பூசி

0 1250

சுமார் 30 லட்சம் டோசுகள் அடங்கிய ஸ்புட்னிக் -வி தடுப்பூசி மருந்துகள் ரஷ்யாவில் இருந்து இன்று ஐதராபாத் வந்து சேர்ந்தன.

அதனுடன், பானேசியா பயொடெக் நிறுவனம் வாயிலாக உற்பத்தி செய்யப்பட உள்ள ஸ்புட்னிக் -வி தடுப்பூசிக்கான மூலப்பொருட்களும் கொண்டு வரப்பட்டுள்ளன. 56 புள்ளி 5 மெட்ரிக் டன் எடையுள்ள தடுப்பூசியும், மருந்து மூல பொருட்களும், சிறப்பு சரக்கு விமானம் மூலம் வந்தன. இவையே இந்தியாவுக்கு இதுவரை கொண்டவரப்பட்ட அதிக எடையுள்ள தடுப்பூச மருந்தாகும்.

அவை 90 நிமிடங்களில் இறக்கப்பட்டு, ஐதராத்தில் உள்ள டாக்டர் ரெட்டிஸ் லேப் நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன.  இந்த மாத மத்தியில் இந்த தடுப்பூசி முழுமையான பயன்பாட்டுக்கு வரும் என கூறப்படுகிறது. ஒரு டோஸ் மருந்து 5 சதவிகித ஜிஎஸ்டியும் சேர்ந்து 995 ரூபாய்க்கு விற்கப்படும் என டாக்டர் ரெட்டிஸ் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments