சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத் தேர்வு குறித்த அறிவிப்புக்குப் பிறகே, தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு குறித்து முடிவு: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்

0 3410

சி.பி.எஸ்.இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியான பிறகு, மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கான பிளஸ் 2 பொதுத்தேர்வு அறிவிப்பு வரும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வை எப்போது நடத்துவது என சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ஆன்லைன் வகுப்புகள் தொடங்குவதற்கு முன்பே பாடப்புத்தகம் வினியோகம் செய்வது தொடர்பாக ஓரிரு நாட்களில் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்றார்.

கல்விக் கட்டண புகார் கமிட்டியை, தனியார் பள்ளிகளில் இருந்து வரும் மற்ற புகார்கள் மீதும் நடவடிக்கை எடுக்கும் வகையில் வலுப்படுத்தவுள்ளதாக அமைச்சர் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments