தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது எப்போது? - பள்ளிக்கல்வித்துறை விளக்கம்

0 11961

தளர்வில்லா முழு ஊரடங்கு முடிந்த பிறகு பள்ளிகள் திறப்பது குறித்து அறிவிக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அதிகாரிகள் ஆகியோருக்கு தொடக்க கல்வி இயக்குநர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு படிக்கின்ற மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அந்த அறிவிப்பை பள்ளியின் பதிவேட்டில் இடம்பெற செய்யவும், மாவட்ட கல்வி அதிகாரிகள் அதனை உறுதி செய்யவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. தளர்வில்லா ஊரடங்கு முடிந்த பின்னர் பள்ளிகள் திறப்பது குறித்து அறிவிக்கப்படும் எனவும், மாணவர்களுக்கு விலையில்லா பாடப் புத்தகங்கள் மற்றும் நலத்திட்டங்கள் வழங்குவது குறித்து பின்னர் தெரிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments