பணம் தேவையில்லை... மருத்துவ தேவைகளுக்காக செல்லும் நோயாளிகளை இலவசமாக கொண்டு சென்று விடும் ஆட்டோ ஒட்டுநர்... குவியும் பாராட்டுக்கள்

0 2206

மதுரையில் அவசர தேவைக்காக மருத்துவமனை செல்லும் நோயாளிகளை இலவசமாக கொண்டு சென்று விடும் ஆட்டோ ஒட்டுநருக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது.

ஊரடங்கால் பொது போக்குவரத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளதால் பலர் மருத்துவமனைகளுக்கு செல்ல போதிய ஊர்திகள் இல்லாமல் தவித்து வருகின்றனர்.  இந்த நிலையில் மருத்துவ தேவைகளுக்கு அவசரமாக செல்ல வேண்டியவர்களை சரியான நேரத்தில் இலவசமாக கொண்டு சேர்த்து வருகிறார் ஆட்டோ ஓட்டுநர் லட்சுமணன்.

பிரசவத்திற்கு இலவசம் என்ற வாசகங்களுக்கு மத்தியில் ஆஸ்பத்திரி அவசரத்திற்கு இலவசம் என்ற வாசகத்தை பொறித்து ராஜாஜி மருத்துவமனை உள்ளிட்ட முக்கிய இடங்களில் சேவை செய்ய காத்து நிற்கிறார். 

உன்னத சேவையாற்றி வரும் லட்சுமணன் அனைத்து பகுதிகளிலும் தங்கு தடையின்றி சென்று வர இ-பாஸ் வழங்க வேண்டும் என்பதையே அரசிடம் இருந்து பிரதிபலனாக பெற விரும்புவதாக தெரிவிக்கின்றார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments