பிரஞ்சு ஓபன் டென்னிஸ் கிரண்ட்ஸ்லாமில் பெடரர் வெற்றி

0 2512
களிமண் தரையில் நடக்கும் கிரண்ட்ஸ்லாம் தொடரான பிரஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் முன்னாள் நம்பர் ஓன் வீரர் ரோஜர் பெடரர் வெற்றி பெற்றார்.

களிமண் தரையில் நடக்கும் கிரண்ட்ஸ்லாம் தொடரான பிரஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் முன்னாள் நம்பர் ஓன் வீரர் ரோஜர் பெடரர் வெற்றி பெற்றார்.

பாரீசில் நடந்த முதல் சுற்று ஆட்டத்தில் சுவீஸ் சாம்பியன் ரோஜர் பெடரர், உஸ்பெகிஸ்தான் வீரர் டெனிஸ் இஸ்டோமினை எதிர்கொண்டார். ஆரம்பம் முதலே தன் வலிமையான ஆட்டத்தை வெளிப்படுத்திய பெடரர் இறுதியில் 6-க்கு 2, 6-க்கு 4, 6-க்கு 3 என்ற நேர் செட் கணக்கில் வென்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு ஆட்டத்தில் ரஷ்ய முன்னணி டெனில் மெட்விடேவ் சக நாட்டவரான அலெக்சாண்டர் புப்லிக்கை வென்று 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்

பெண்கள் பிரிவில் நீண்ட நாட்களுக்கு பின் களமிறங்கிய அமெரிக்க ஜாம்பவான் 39 வயதான செரீனா வில்லியம்ஸ், 7-க்கு 6, 6-க்கு 2 என்ற நேர் செட் கணக்கில் ரூமேனியா வீராங்கனை ஐரீனா கமிலியா பெகுவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments