இந்தியாவில் 1.5 லட்சத்திற்கு கீழ் குறைந்தது கொரோனா பாதிப்பு

0 1894

இந்தியாவில் கடந்த 54 நாட்களில் இல்லாத அளவாக ஒரு நாள் கொரோனா பாதிப்பு ஒன்றரை லட்சத்துக்கு கீழ் குறைந்துள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன் 4 லட்சத்தை தாண்டி பதிவான ஒரு நாள் கொரோனா பாதிப்பு, பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தபட்டதன் விளைவாக படிப்படியாக குறைந்து வருகிறது.மஹராஷ்டிராவில் 65ஆயிரத்தை தாண்டிய ஒரு நாள் கொரோனா பாதிப்பு தற்போது 15 ஆயிரம் என்ற அளவில் குறைந்துள்ளது.

அதேபோன்று, டெல்லியில் 10ஆயிரத்திற்கும் மேல் பதிவான தினசரி தொற்று எண்ணிக்கை, தற்போது ஆயிரத்திற்கும் கீழ் வீழ்ச்சியடைந்துள்ளது. கர்நாடகாவிலும் சரிபாதிக்கும் கீழ் குறைந்துள்ளது. கேரளாவில் 30ஆயிரத்தை தொட்ட நோய்த்தொற்று தற்போது 12 ஆயிரம் என்ற அளவில் குறைந்துள்ளது. தமிழகத்தில் 40 ஆயிரத்தை நெருங்கிய ஒரு நாள் கொரோனா பாதிப்பு தற்போது 27ஆயிரம் என்ற அளவில் சரிந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments