கொரோனாவுக்கு பின் குழந்தைகளைத் தாக்கும் MIS-C எனப்படும் அழற்சி நோய்? மருத்துவர்கள் எச்சரிக்கை

0 6296
கொரோனா தொற்றுக்கு ஆளான குழந்தைகளுக்கு பின்னாளில் MIS-C எனப்படும் அழற்சி நோய்கள் தாக்குவதற்கு வாய்ப்பு உள்ளதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

கொரோனா தொற்றுக்கு ஆளான குழந்தைகளுக்கு பின்னாளில் MIS-C எனப்படும் அழற்சி நோய்கள் தாக்குவதற்கு வாய்ப்பு உள்ளதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ள மருத்துவர் ஒருவர், கொரோனா தொற்றிலிருந்து மீண்ட குழந்தைகளுக்கு மல்டிசிஸ்டம் இன்ஃபளமேட்டரி சிண்ட்ரோம் எனப்படும் அழற்சி நோய் தாக்கும் அபாயம் உள்ளதாகத் தெரிவித்தார். இதுவரை நாடு முழுவதும் இந்தவகை நோயால் 5 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவர் கூறியுள்ளார். இந்தவகை நோய்களால் குழந்தையின் உயிருக்கு ஆபத்தில்லை என்ற போதிலும் இதயம், கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களை கடுமையாகப் பாதிக்கும் என்று எச்சரித்துள்ளார்.

தொற்றுக்கு நான்கு முதல் ஆறு வாரங்களுக்குப் பிறகு இந்த நோய் ஏற்படுகிறது என்று குறிப்பிட்ட அந்த மருத்துவர், MIS-C கிருமிகளை எதிர்த்துப் போரிட குழந்தைகளின் உடம்பில் ஆக்ஸிடென்கள் உற்பத்தி அதிகரிக்க வேண்டும் என்று கூறினார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments