முழு ஊரடங்கிற்கு விரைவில் முற்றுப்புள்ளி - முதலமைச்சர்

0 9796
கொரோனா பரவலைத் தடுக்க மாஸ்க் அணிவது, தனிநபர் இடைவெளி உள்ளிட்டவற்றை கட்டாயம் பின்பற்ற வேண்டும்

முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதை தொடர்ந்து கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருவதாக கூறியுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஊரடங்கை நீட்டித்துக் கொண்டே போகமுடியாது, அதற்கு விரைவில் முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும் என தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வீடியோவில், சென்னையில் இன்னும் ஒரு சில நாட்களில் தொற்று பாதிப்பு முழுமையாக குறைந்துவிடும் என்றார். கோவை உள்ளிட்ட மேற்கு மண்டலங்களிலும் 2 நாட்களாக தொற்று பாதிப்பு குறைந்து வருவதாக அவர் கூறினார்.

முழு ஊரடங்கை நீட்டிப்பதும், அதற்கு முற்றுப்புள்ளி வைப்பதும் மக்களின் கையில் தான் உள்ளது என முதலமைச்சர் குறிப்பிட்டார்.

தொற்று பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற போதுமான படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும், ஆக்சிஜன் தட்டுப்பாடே இல்லை என்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments