2 நாட்களில் கொரோனா தடுப்பூசி தீர்ந்திடும்-அமைச்சர் மா.சுப்ரமணியன் தகவல்

0 965

தமிழ்நாட்டில், கையிருப்பில் உள்ள கொரோனா தடுப்பு மருந்துகள் இரண்டு நாட்களில் தீர்ந்து விடும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். வருகிற 6ஆம் தேதிக்குப் பிறகு நிலைமை சுமூகமாகலாம் என்றும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். 

சென்னை நந்தம்பாக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா நோயாளிகளுக்கான படுக்கை வசதிகள் மற்றும் தடுப்பூசிகள் குறித்து ஆய்வு நடத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் கையிருப்பில் உள்ள 5 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் இரண்டு நாட்களில் காலியாகிவிடும் என்று தெரிவித்தார்.

25 லட்சம் தடுப்பூசிகள் தரவேண்டிய நிலையில் 13 லட்சம் தடுப்பூசிகள் வந்துள்ளதாகக் குறிப்பிட்ட அமைச்சர் மத்திய அரசிடம் இருந்து வரவேண்டிய தடுப்பூசிகளுக்காக காத்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.

இந்த நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், தடுப்பூசி போடுவதற்கு பொதுமக்கள் தற்போது அதிகம் ஆர்வம் காட்டுவதாகக் குறிப்பிட்டார். தடுப்பூசி தட்டுப்பட்டினால் ஜூன் 3 முதல்  5 ம் தேதி வரை தடுப்பூசி போட முடியாது என்று தெரிவித்தார்.

ஜூன் 6ம் தேதியில் முதல் கட்டமாக 3 லட்சம் தடுப்பூசிகள் தமிழகத்திற்கு வரும் என்று தெரிவித்த ராதாகிருஷ்ணன், தமிழகத்திற்கு இதுவரை 96 லட்சத்து 10 ஆயிரம் தடுப்பூசிகள் வந்துள்ளதாகவும்,அதில் 87 லட்சத்து 70 ஆயிரம் தடுப்பூசிகள்  பயன்படுத்தப்பட்டு உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments