இன்று முதல் ரேஷன் கடைகளில் 13 வகையான மளிகைப் பொருட்களுக்கான டோக்கன் விநியோகம்

0 6425
தமிழகத்தில் ரேஷன் கடைகளில் 13 வகையான மளிகைப் பொருட்கள் வழங்குவதற்கான டோக்கன் இன்று முதல் விநியோகிக்கப்படுகிறது.

தமிழகத்தில் ரேஷன் கடைகளில் 13 வகையான மளிகைப் பொருட்கள் வழங்குவதற்கான டோக்கன் இன்று முதல் விநியோகிக்கப்படுகிறது.

இதுகுறித்து தமிழக அரசு விடுத்துள்ள அறிக்கையில், இன்று முதல் வரும் 4ம் தேதி வரை ரேஷன் கடை ஊழியர்கள் குடும்ப அட்டைதாரர்களின் வீடுகளுக்கே சென்று மளிகைப் பொருட்களுக்கான டோக்கனை வழங்குவர். இந்த டோக்கனில் குடும்ப அட்டைதாரர் பொருட்கள் வாங்க வேண்டிய நாள், நேரம், கடையின் பெயர் எழுதப்பட்டிருக்கும்.

இந்தப் பொருட்கள் விநியோகம் 5ம் தேதி முதல் தொடங்கும். நாளொன்றுக்கு 200 நபர்களுக்கு மட்டுமே மளிகைப் பொருட்கள் விநியோகிக்கப்படும் என்றும், பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து, தனிமனித இடைவெளியுடன் பொருட்களை பெற்றுச் செல்லலாம் என தமிழக அரசு விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments