ஆந்திராவில் கொரோனாவுக்கு ஆனந்தய்யா என்பவர் வழங்கி வந்த ஆயுர்வேத மருந்துக்கு அம்மாநில அரசு அனுமதி

0 9145

ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்பட்டு வந்த ஆனந்தய்யாவின் ஆயுர்வேத மருந்துக்கு அம்மாநில அரசு அனுமதி அளித்துள்ளது.

கிருஷ்ணபட்டினம் அடுத்த முத்துக்கூறு கிராமத்தை சேர்ந்த ஆனந்தய்யா என்பவர் பல்வேறு மூலிகைகளைக் கொண்டு லேகியம் செய்து கொரோனா நோயாளிகளுக்கு அளித்து வந்தார். அவை நல்ல பலன் தருவதாகக் கூறி ஆயிரக்கணக்கான மக்கள் அவரை அணுகி மருந்தை வாங்கிச் சென்றனர். இந்த விவகாரம் ஆந்திர அரசின் கவனத்துக்குச் சென்ற நிலையில், ஆயுஷ் அமைச்சகத்துக்கு மருந்து அனுப்பி வைக்கப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

அதில் ஆனந்தய்யாவின் மருந்தால் கொரோனா சரியாகும் என்று உறுதியாகச் சொல்ல முடியாவிட்டாலும் பக்க விளைவுகள் ஏதுமில்லை என்று சான்றளிக்கப்பட்டது. இதனையடுத்து ஆந்திர அரசு ஆனந்தய்யாவின் மருந்துக்கு அனுமதி வழங்கியுள்ளது. அதே நேரம் ஆக்சிஜன் குறைபாடு கொண்ட நோயாளிகளுக்கு கண்ணில் விடும் சொட்டு மருந்துக்கு இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments