யு.ஏ.இ-ல் நடக்கும் ஐபிஎல் போட்டிகளில் பார்வையாளர்களுக்கு அனுமதி?

0 3453
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள எஞ்சிய ஐபிஎல் போட்டிகளில் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என தகவல் வெளியாகி உள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள எஞ்சிய ஐபிஎல் போட்டிகளில் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என தகவல் வெளியாகி உள்ளது.

கொரோனா 2 ஆம் அலையால் இந்தியாவில் தள்ளி வைக்கப்பட்ட ஐபிஎல்லின் 31 போட்டிகள் வரும் செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் துபாய், அபுதாபி, ஷார்ஜா ஆகிய இடங்களில் நடக்கும் என பிசிசிஐ அறிவித்துள்ளது.

இந்த போட்டிகளை காண கொரோனா தடுப்பூசி எடுத்துள்ள ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் மைதான இருக்கைகளில் 50 சதவிகிதத்திற்கு மிகாமல் அமர்ந்து அவர்கள் போட்டிகளை காணலாம் என அமீரக கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments