அரசின் புதிய தடுப்பூசித் திட்ட அம்சங்கள்..!

0 1075

இரண்டு டோசுகளுக்கு வெவ்வேறு கொரோனா தடுப்பூசிகளை போடுவது, கோவிஷீல்டின் ஒரே டோசை போட்டு பரிசோதிப்பது போன்ற அம்சங்கள் அரசின் புதிய தடுப்பூசி கொள்கையில் இடம் பெறும் என கூறப்படுகிறது.

வரும் ஜூலை மாதவாக்கில் தினமும் ஒரு கோடி பேருக்கு தடுப்பூசி போட திட்டமிட்டுள்ள நிலையில் இது, முக்கியமான தடுப்பூசி திட்டமாக பார்க்கப்படுகிறது.

அதே போன்று, கோவிஷீல்டு டோசுகளுக்கு இடையேயான இடைவெளியை அதிகரித்தால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் அரசு ஆராய உள்ளதாக கூறப்படுகிறது. அதில் நல்ல முடிவு கிடைத்தால் எதிர்காலத்தில் கோவிஷீல்டை ஒரு டோசுடன் நிறுத்தி, அதிகம் பேருக்கு தடுப்பூசி போடலாமா என முடிவு செய்யப்படும்.

தடுப்பூசி பாதக விளைவுகள் ஏற்பட்டால் அதுகுறித்து எளிதாக அதிகாரிகளுக்கு தகவல் அளிக்க உதவும் புதிய செயலி ஒன்றும் விரைவில் வருகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments