தாவுடா... தாவு, சாலையோர தடுப்புச் சுவரில் இருந்து குதித்த காட்டு யானை... வைரல் வீடியோ..!

0 14070

குன்னூர் மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் சாலையோர தடுப்புச் சுவரில் இருந்து ஆண் யானை ஒன்று குதித்து இறங்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

பொதுவாகவே யானைகளுக்கு பருத்த தேகம் காரணமாகவும், அதீத எடை காரணமாகவும் பள்ளத்தில் இறங்குவது என்றால் பயம். தங்களின் வழித்தடங்கள் ஆக்கிரமிக்கப்படுவதால் யானைகள் சாலைகளில் உலா வருகின்றன. இந்த நிலையில் வனப்பகுதியை விட்டு வெளியேறிய ஆண் யானை ஒன்று சாலையோர தடுப்புச் சுவரில் இருந்து இறங்குவதற்கு பகீரத பிரயத்தனம் எடுத்தது.

நீண்ட முயற்சிக்குப் பின்னர் முன்னங்கால்களை வைத்து சுவற்றில் சறுக்கி திடும் என குதித்து இறங்குகிறது. தானே.... சுவற்றில் இருந்து இறங்குவதற்கு திணறிக் கொண்டிருந்த நிலையில் அதனைப் படம் பிடித்துக் கொண்டிருந்தவரைக் கண்டதும் ஆத்திரம் கொண்ட யானை அவரை ஓட ஓட விரட்டியது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments