இந்த ஆண்டின் இறுதிக்குள் நாட்டு மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும்-உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு நம்பிக்கை

0 1344
இந்த ஆண்டின் இறுதிக்குள் நாட்டு மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும் என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டின் இறுதிக்குள் நாட்டு மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும் என  உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இது தொடர்பான வழக்கு விசாரணையின் போது, மத்திய அரசின் கொரோனா தடுப்பூசிக் கொள்கையில் பல்வேறு குறைபாடுகள் உள்ளதாகக் கூறியுள்ள உச்சநீதிமன்றம் பல வினாக்களை எழுப்பியுள்ளது.

18 முதல் 45 வயது வரையுள்ள பிரிவினருக்குத் தடுப்பூசி கொள்முதல் தொடர்பான மத்திய அரசின் வேறுபட்ட கொள்கையைச் சாடியது. மத்திய அரசுக்கு ஒரு விலையும், மாநில அரசுக்கு இன்னொரு விலையும், தனியார் மருத்துவமனைகளுக்கு அதைவிடக் கூடுதல் விலையும் என மருந்து நிறுவனங்கள் விலை நிர்ணயம் செய்துள்ளதைக் குறைகூறினர்.

தடுப்பு மருந்து தட்டுப்பாடு, ஊரகப்பகுதிகளில் தடுப்பு மருந்து கிடைக்காமை ஆகியவற்றுக்காகவும் குறைகூறிய நீதிபதிகள் இது குறித்து 2 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments