கேஸ் டேங்கர் லாரி பின்புறம் மீது ஆம்னி வேன் மோதி விபத்து-9 மாத குழந்தை, 2 பெண்கள் உட்பட 5 பேர் உயிரிழந்த பரிதாபம்

0 1946
கிருஷ்ணகிரி அருகே சாலையோரம் நின்றிருந்த கேஸ் டேங்கர் லாரி மீது ஆம்னி வேன் மோதிய விபத்தில் 9 மாத குழந்தை உட்பட 5 பேர் உயிரிழந்தனர்.

கிருஷ்ணகிரி அருகே சாலையோரம் நின்றிருந்த கேஸ் டேங்கர் லாரி மீது ஆம்னி வேன் மோதிய விபத்தில் 9 மாத குழந்தை உட்பட 5 பேர் உயிரிழந்தனர்.

பெங்களூருவைச் சேர்ந்த 8 பேர் நேற்று ஆம்னி வேனில் வேலூர் குடியாத்தத்தில் நடந்த சுப நிகழ்ச்சிக்கு சென்று விட்டு மீண்டும் பெங்களூர் நோக்கிச் சென்றனர். கிருஷ்ணகிரி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுண்டம்பட்டி அருகே சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கேஸ் டேங்கர் லாரியின் பின்புறம் மோதி வேன் விபத்துக்குள்ளானது. இதில் இரண்டு பெண்கள், 9 மாத கைக்குழந்தை, வேன் ஓட்டுநர் சுரேஷ் என 4 பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர்.

படுகாயமடைந்த 4 பேரில் ஒருவர் மருத்துவமனை அழைத்துச் செல்லும் வழியில் உயிரிழந்தார். ஓட்டுநர் தூக்கலக்கத்தில் இருந்ததாகக் கூறப்படும் நிலையில், ஊரடங்கால் சாலை வெறிச்சோடிக் கிடந்ததால் அதிவேகமாக வேனை ஓட்டி வந்ததாலும், விபத்து ஏற்பட்டிருக்கலாம் என போலீசார் கூறுகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments