16 வருடங்களுக்கு முன் போதை மருந்து குற்றவாளி.. தண்டனை வழங்கிய நீதிபதியே வழக்கறிஞராக பதவி பிரமாணம் செய்து வைத்த சுவாரசிய நிகழ்வு..!

0 3902

16 ஆண்டுகளுக்கு முன்னர் தமக்கு முன்பு போதை மருந்து குற்றவாளியாக நின்று தண்டனை பெற்ற ஒரு நபருக்கு, அதே நீதிபதி, வழக்கறிஞராக பதவி பிரமாணம் செய்து வைத்த சுவாரசியமான நிகழ்வு அமெரிக்காவின் மிச்சிகனில் நடைபெற்றுள்ளது.

நீதிபதி புரூஸ் மோரோவுக்கு (Bruce Morrow) முன்பு குற்றவாளியாக நிறுத்தப்பட்ட எட்வர்ட் மார்டெல்லுக்கு (Edward Martell) கோகெயின் விற்றதற்காக 20 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை வழங்கும் நிலை இருந்தது. ஆனால் அப்போது 27 வயதாக இருந்த எட்வர்ட் மார்டெல் மற்ற குற்றவாளிகளை போல அல்லாமல் இருந்ததையும், அவர் திருந்துவார் என்பதையும் கணித்து 3 ஆண்டு தண்டனை மட்டுமே வழங்கினார் நீதிபதி புரூஸ் மோரோ.

போதை மருந்தை விற்க வேண்டாம் உன்னால் பெரிய நிறுவனத்தின் தலைவர் என்ற அளவுக்கு உயர முடியும் என்ற நம்பிக்கை வார்த்தைகளையும் நீதிபதி வழங்கினார்.அதன்பின்னர் விடுதலையாகி சட்டம் படித்த எட்வர்ட் மார்டெல்லுக்கு மிச்சிகன் பார் கவுன்சில் வழக்கறிஞராக அதே நீதிபதியே பதவிப்பிரமாணம் செய்து வைத்திருக்கிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments