2 நாட்களில் கொரோனா தடுப்பூசி தீர்ந்துவிடும்-அமைச்சர் மா.சுப்ரமணியன் தகவல்

0 2455
தமிழகத்தில் கையிருப்பில் உள்ள 5 லட்சம் டோஸ் கொரோனா தடுப்பு மருந்து இரு நாட்களுக்குத் தான் போதுமானது என சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கையிருப்பில் உள்ள 5 லட்சம் டோஸ் கொரோனா தடுப்பு மருந்து இரு நாட்களுக்குத் தான் போதுமானது என சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நந்தம்பாக்கத்தில் 864 ஆக்சிஜன் படுக்கைகள்  பயன்பாட்டுக்கு வந்துள்ளதாகத் தெரிவித்தார். தமிழகத்தில் கையிருப்பில் உள்ள 5 லட்சம் டோஸ் தடுப்பு மருந்து இரு நாட்களில் முடிந்துவிடும் என்பதால், மத்திய அரசின் தொகுப்பில் இருந்து தடுப்பு மருந்து வரும் என எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார். 

முன்னதாக திருவிக நகரில் பேசிய அமைச்சர் சுப்ரமணியன், தமிழகத்தில் நாளொன்றுக்கு சராசரியாக ஒரு லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருவதாக கூறினார். இதுவரையில் தமிழகத்துக்கு மொத்தமாக 96லட்சம் டோஸ் கிடைக்கப்பெற்றுள்ளதாகவு தெரிவித்தார். 

முந்தைய ஆட்சியில் நாளொன்றுக்கு 60ஆயிரம் பேருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டதாகவும், தற்போது 1லட்சத்து4ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்படுவதாகவும் அவர் கூறினார்.

செங்கல்பட்டில் தடுப்பூசி உற்பத்தியை தொடங்குவது குறித்து மத்திய அரசிடம் இருந்து ஒரு வாரத்திற்குள் பதில் கிடைக்கும் என நம்புவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். இல்லை என்றால் தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி உற்பத்தியை துவங்க அனுமதி கேட்க உள்ளதாக அவர் தெரிவித்தார்.

தமிழகத்தில் கொரோனா தடுப்பு மருந்து தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், மத்திய அரசின் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

தமிழகத்தில் கையிருப்பில் உள்ள 5 இலட்சம் டோஸ் கொரோனா தடுப்பு மருந்து 2 நாளுக்கு மட்டுமே போதுமானது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மத்தியத் தொகுப்பில் இருந்து கூடுதல் தடுப்பு மருந்துகளை வழங்கும்படி தமிழக அரசு கோரிக்கை விடுக்க உள்ளது.

இன்று பிற்பகல் மூன்றரை மணிக்கு மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகளுடனான ஆலோசனையில் தமிழக சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் காணொலியில் பங்கேற்கிறார். அப்போது தமிழகத்தின் கோரிக்கையை அவர் வலியுறுத்த உள்ளதாகக் கூறப்படுகிறது

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments