சிக்னல் கோளாறை சரி செய்துவிட்டு திரும்பிய 2 ரயில்வே ஊழியர்கள் சரக்கு ரயில் மோதி பரிதாபமாக உயிரிழப்பு

0 2162
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் கொட்டும் மழையில் சிக்னல் கோளாறை சரி செய்து விட்டு திரும்பிய ரயில்வே ஊழியர்கள் 2 பேர் சரக்கு ரயில் மோதி பரிதாபமாக உயிரிழந்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் கொட்டும் மழையில் சிக்னல் கோளாறை சரி செய்து விட்டு திரும்பிய ரயில்வே ஊழியர்கள் 2 பேர் சரக்கு ரயில் மோதி பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஆம்பூர் அடுத்த பச்சக்குப்பம் பகுதியில் பெங்களூரு - சென்னை இடையிலான ரயில்வே மார்க்கத்தில் மழை காரணமாக நள்ளிரவில் சிக்னல் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, ரயில்வே பொறியாளர் முருகேசன் மற்றும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த டெக்னீசியன் பர்வேஷ் குமார் ஆகிய இருவரும் கொட்டும் மழையில் சிக்னல் கோளாறை சரிசெய்து விட்டு தண்டவாளத்தில் நடந்து ஸ்டேஷனுக்கு வந்து கொண்டிருந்தனர். அ

ப்போது, ஜோலார்பேட்டையில் இருந்து ரேணிகுண்டா நோக்கி சென்ற சரக்கு ரயில் மோதி இருவரும் உடல் சிதைந்து உயிரிழந்தனர். கனமழை காரணமாக ரயில் வருவதை அறியாமல் தண்டவாளத்தில் நடந்து வந்ததால் விபத்து நடந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments