பிறந்தநாள் கொண்டாட நீர்வீழ்ச்சிக்கு சென்ற இளைஞர்கள்-புதைமணலில் சிக்கி பரிதாபமாக உயிரிழப்பு

0 2887
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது 3 இளைஞர்கள் புதைகுழியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது 3 இளைஞர்கள் புதைகுழியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

சன்னியாசிம்மாபாளையத்தை சேர்ந்த இளைஞரின் பிறந்தநாளையொட்டி ஊரடங்கை மீறி அல்லம்புட்டு நீர்வீழ்ச்சிக்கு 18 இளைஞர்கள் சென்றுள்ளனர்.

அங்கு நீர்வீழ்ச்சியில் இருந்த குட்டையில் அனைவரும் குதித்து விளையாடி கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக 3 இளைஞர்கள் புதைமணலில் சிக்கி கொண்டனர். இதுகுறித்து தீயணைப்புத்துறை மற்றும் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து புதை குழியில் இருந்து இளைஞர்கள் சடலமாக மீட்கப்பட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments