சென்னையில் தினசரி கொரோனா பாதிப்பு, 9 முதல் 10 சதவீதம் வரை குறைந்தது

0 1521

சென்னையில் ஊரடங்கிற்கு முன்பு 30 முதல் 40 சதவீதமாக இருந்த தினசரி கொரோனா பாதிப்பு, 9 முதல் 10 சதவீதமாக குறைந்துள்ளது.

கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு கடந்த 24ஆம் தேதி முதல் தளர்வுகளற்ற ஊரடங்கை அமல்படுத்தியது.

சென்னையிலுள்ள 15 மண்டலங்களிலும் நாள் ஒன்றுக்கு 28000 முதல் 29000 பரிசோதனை செய்யப்பட்டு வரும் நிலையில் முழு ஊரடங்கிற்கு முன் தினசரி பாதிப்பு 6000 வரை பதிவானது.

அதிகபட்சமாக கடந்த 19ஆம் தேதி ஒரே நாளில் 6,297 பேருக்கு தொற்று பாதித்திருந்த நிலையில் முழு ஊரடங்குக்கு பின் தினசரி பாதிப்பு 9முதல்10 சதவீதமாக குறைந்துள்ளது. அதன்படி, நேற்று 28,980 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் 2,689 பேருக்கு மட்டுமே தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments