சிபிஎஸ்இ தேர்வு-நாளை முக்கிய அறிவிப்பு

0 2241
சிபிஎஸ்இ 12ம் வகுப்புத் தேர்வுகள் குறித்து தேர்வுகள் வாரியம் நாளை முக்கிய முடிவை அறிவிக்க உள்ளது.

சிபிஎஸ்இ 12ம் வகுப்புத் தேர்வுகள் குறித்து தேர்வுகள் வாரியம் நாளை முக்கிய முடிவை அறிவிக்க உள்ளது.

கொரோனா தொற்றை முன்னிட்டு சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 12ம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில், இதுகுறித்துப் பேசிய மத்திய கல்வி அமைச்சக அதிகாரி ஒருவர், நாட்டின் பல்வேறு பகுதிகளில் பொதுமுடக்கம் அமலில் இருக்கும் நிலையில் ஒரே நேரத்தில் தேர்வு நடத்துவது இயலாத காரியம் எனக் குறிப்பிட்டார். 

12ம் வகுப்புத் தேர்வுகள் ரத்து செய்யப்படும் பட்சத்தில் மாணவர் 9, 10 மற்றும் 11ம் வகுப்புகளில் எடுத்த மதிப்பெண்கள் அடிப்படையில் 12ம் வகுப்பு மதிப்பெண்களை வழங்கும் திட்டம் பரிசீலனையில் இருப்பதாகவும் அந்த அதிகாரி குறிப்பிட்டார். இது தொடர்பாக நாளை முக்கிய அறிவிப்பு வெளியாக உள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments