ஜூலை மாதத்திற்குள் 20-25 கோடி டோஸ்கள் தடுப்பூசி வாங்க மத்திய அரசு முடிவு

0 1308
ஜூலை மாத இறுதிக்குள் 20 முதல் 25 கோடி டோஸ்கள் தடுப்பூசியை வாங்க மத்திய அரசு தீர்மானித்துள்ளது.

ஜூலை மாத இறுதிக்குள் 20 முதல் 25 கோடி டோஸ்கள் தடுப்பூசியை வாங்க மத்திய அரசு தீர்மானித்துள்ளது.

இதுகுறித்து பேசிய மத்திய அரசு அதிகாரி ஒருவர், கொரோனா 2வது அலையைக் கட்டுப்படுத்தும் வகையில் ஜூலை மாத இறுதிக்குள் 25 கோடி டோஸ்கள் தடுப்பூசியையும், ஆகஸ்ட் முதல் செப்டம்பர் மாதத்திற்குள் 30 கோடி டோஸ் தடுப்பூசிகளையும் வாங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

இந்நிலையில் ஜூன் மாதத்தில் 10 முதல் 12 கோடி டோஸ்கள் கோவிஷீல்ட் தடுப்பூசியை வழங்குவதாக சீரம் நிறுவனம் அறிவித்துள்ளது. மே மாதத்தில் மட்டும் 4 கோடியே 3 லட்சத்து 50 ஆயிரம் தடுப்பூசி மருந்துகள் மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments