வரலாறு காணாத புதிய உச்சத்தைத் தொட்ட பெட்ரோல், டீசல் விலை

0 8622
மே மாதத்தில் 16ஆவது முறையாகப் பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளதால், மீண்டும் வரலாறு காணாத புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

மே மாதத்தில் 16ஆவது முறையாகப் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளதால், மீண்டும் வரலாறு காணாத புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

பெட்ரோல் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் நிர்ணயித்து வருகின்றன.

நேற்று ஒருநாள் விலை உயர்த்தப்படாத நிலையில், சென்னையில் இன்று பெட்ரோல் டீசல் விலை லிட்டருக்கு 25 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது. பெட்ரோல் விலை லிட்டருக்கு 95 ரூபாய் 76 காசுகளாகவும், டீசல் விலை 89 ரூபாய் 90 காசுகளாகவும் உள்ளது. மும்பையில் பெட்ரோல் விலை நூறு ரூபாயைத் தாண்டியுள்ள நிலையில், போபாலில் 102 ரூபாய் 34 காசுகளாக உள்ளது.

மே மாதத்தில் ஒருநாள் விட்டு ஒருநாள் என மொத்தம் 16 முறை விலை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த மாதத்தில் மட்டும் பெட்ரோல் விலை 3 ரூபாய் 80 காசுகளும், டீசல் விலை 4 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments