தெலுங்கானாவில் மேலும் 10 நாட்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு

0 1319

தெலுங்கானாவில் இன்று முதல் ஜூன் 9-ஆம் தேதி வரை 10 நாட்களுக்கு ஊரடங்கு நீட்டித்து அறிவிக்கப்பட்டு உள்ளது. அங்கு ஏற்கெனவே அமலில் இருக்கும் முழு ஊரடங்கு இன்றுடன் நிறைவடைகிறது.

இந்த நிலையில் நேற்று முதலமைச்சர் சந்திரசேகர ராவ் தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் ஊரடங்கை மேலும் 10 நாட்களுக்கு நீட்டிப்பது குறித்து முடிவு செய்யப்பட்டது. மேலும் ஊரடங்கில் பகல் 1 மணி வரை தளர்வு அளிக்கப்பட்டு உள்ள நிலையில் அதை 10 மணியாக குறைக்க முடிவு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதேபோல் விதிமுறைகளை மீறி சிகிச்சை அளித்த மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments