கொரோனா நோயாளிகளுக்கு இலவசமாக உணவளிக்கும் மாணவி.!

0 2747

தராபாத்தை சேர்ந்த பிடெக் மாணவி, கொரோனா பாதித்து வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளவர்களுக்கு நேரில் சென்று இலவசமாக உணவளித்து வருகிறார்.

ஸ்நேகா ஸ்ரீராம்பூர் என்ற அந்த மாணவி ashirvad food service என்ற சேவை நிறுவனத்தை தொடங்கி வீட்டிலேயே உணவு தயாரித்து அதை கொரோனா நோயாளிகளுக்கு நேரில் சென்று இலவசமாக உணவளித்து வருகிறார்.

மருத்துவர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்களின் சேவையை பார்த்து தாமும் மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என நினைத்து இந்த சேவையை அளித்து வருவதாக கூறிய அவர், இந்த முயற்சியை தனது நண்பர்களும், குடும்பத்தினரும் சமூக வலைதளங்களில் விளம்பரப்படுத்தியதாக தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments