எலியாரை சோதித்த இட்லியார்... இட்லியாரை தூக்கிய எலியார்... இது தான் வலிமை அப்டேட்.!

0 14975

ரடங்கால் முடங்கிக் கிடக்கும் மக்களை போலவே தனது வாழ்விடத்தில் பதுங்கி இருந்த எலி ஒன்று, மனிதனால் வீணடிக்கப்பட்ட முழு இட்லி ஒன்றை எடுத்துச்செல்ல முயற்சித்து, அதில் வெற்றியும் கண்ட வீடியோ காட்சி ஒன்று வெளியாகி உள்ளது.

மனச்சோர்வடைந்த எளியவர்களுக்கு நம்பிக்கை தரும் எலியாரின் வலிமை குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.

முழு ஊரடங்கு போதிய வருமானமில்லை..! ஒருவர் முகத்தை பார்த்து கொண்டும்.... கையில் இருகின்ற ஸ்மார்ட் போனை உற்ற தோழனாக்கி உரையாடிக் கொண்டும்.... நாட்களை வீட்டிற்குள்ளேயே முடங்கிக்கிடந்தாலும் மூன்று வேளையும் இருப்பதை கொண்டு சமைத்துப் பசியாறி வருகின்றனர்

மனிதர்கள் வீணடித்த உணவுப் பொருட்களை உண்டு கொழுத்த ஜீவராசிகளில், வீடுகளிலும் கால்வாய் ஓரங்களிலும் உள்ள பொந்துகளில் ஒட்டு குடித்தனம் நடத்தி வரும் எலியார்கள் நிலைமைதான் கொஞ்சம் கவலைக்கிடமாக உள்ளது. நினைத்த நேரத்தில் கண்ணில் பட்ட உணவு பொருட்களையெல்லாம் கடித்து குதறி ருசிகண்ட எலி ஒன்று மனிதானால் வீணடிக்கப்பட்ட ஒற்றை இட்லியை தனது வாழ்விடத்திற்கு எடுத்து செல்ல மேற்கொண்ட வீடியோ ஒன்று விடாமுயற்சிக்கு உதாரணமாக மாறி வைரலாகி வருகின்றது

சாலை ஓரம் உள்ள பொந்து ஒன்றிலிருந்து மிகுந்த எச்சரிக்கையுடன் வெளியேவரும் எலி ஒன்று தனது வாழ்விடத்திற்கு அருகே மனிதனால் வீண் என்று விட்டு செல்லப்பட்ட முழு இட்லி ஒன்றை கண்டதும் குஷியாகி அதனை தனது சிறிய வாயால் கவ்வி செல்ல முயன்றது

எலியாரை விட இட்லியார் பெரியதாக இருந்ததால் அதனை சட்டென்று தூக்கி செல்ல இயலவில்லை. இருந்தாலும் மனம் தளராத எலியார் தனது வலிமையை காட்டி, ஒரு வழியாக அந்த இட்லியை பொந்திற்கு கவ்வி இழுத்துச் சென்றார்.

எலியாரின் போதாத காலம் , இட்லியாரை பொந்திற்குள் நுழைக்க முடியவில்லை. எலி போராடிக் கொண்டிருக்கும் போதே அவரது பிடியில் இருந்து நழுவிய இட்லியார் கீழே உருண்டோடிவிட்டார்

ஏமாற்றத்துடன் பொந்திற்க்குள் சென்று வந்த எலியார் மீண்டும் தன்னம்பிகையுடன் இட்லியை இழுக்கும் முயற்சியை மேற்கொண்டார். இந்த முறை இட்லியாரை மிகவும் கவனமாக கவ்வி இழுத்துக் கொண்டு தனது பொந்திற்குள் உந்தி தள்ளியது எலி..!

எலியாரின் விடா முயற்சிக்கு கை மேல் பலன் கிடைத்தது லாவகமாக இட்லி முழுமையாக பொந்திற்குள் செல்ல, அடுத்த நொடியே அந்த இட்லியை தனது பொந்திற்குள் இழுத்து சென்றது.

வழக்கமாக வீட்டில் உணவு தானியங்களை வேட்டையாடும் எலிகளை கண்டால் நம்மில் பலருக்கு சுந்தரா டிராவல்ஸ் வடிவேலுவை போல முகம் சிவப்பது வாடிக்கை.

ஆனால் விடா முயற்சியுடன் போராடி அந்த இட்லியை தூக்கி சென்ற எலியாரை பார்க்கும்போது, வீட்டில் உள்ளோரின் பசியை தீர்க்க , அன்றாடம் ஏதாவது ஒரு வேலைக்கு சென்று கூலியுடன் திரும்பும் ஏழை தொழிலாளர்களின் வாழ்க்கைப் போராட்டம் தான் நினைவிற்கு வருகிறது.

அதே நேரத்தில் தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் இருந்தால் வாழ்க்கையில் தடைகளை தாண்டி சவால்ளை நிச்சயம் வெற்றி கொள்ளலாம் என்பதற்கு இந்த எலியாரே சாட்சி..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments