பெங்களூருவில் கொரோனாவால் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய லஞ்சம்

0 2186

பெங்களூருவில் கொரோனாவால் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய மயானத்தில் லஞ்சம் தலைவிரித்தாடுவதாக புகார் எழுந்துள்ளது.

பெங்களூருவில் கொரோனா தொற்றால் உயிரிழப்போரின் உடல்கள் இலவசமாக அடக்கம் செய்யப்படும் என மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ள நிலையில், இறுதிச்சடங்கு செய்ய நியமனம் செய்யப்பட்டுள்ள ஊழியர்கள் மற்றும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள், மயானத்தில் உடல்களை நிறுத்திவைக்க கட்டணமாக 20 முதல் 30 ஆயிரம் ரூபாய் வரையிலும், இறுதி சடங்கு செய்து ரசீது கொடுக்க 5 முதல் 10 ஆயிரம் வரையிலும் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

உடலை எரித்த பின் சாம்பலை வாங்க 400 ரூபாயும் வசூலிக்கப்படுவதாக பாதிக்கப்பட்டவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments