முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் நன்றி

0 5815
முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் நன்றி

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு 5 லட்சம் ரூபாய் வைப்புத் தொகை வழங்கும் அறிவிப்புக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம் நன்றி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள ஒரு டுவிட்டர் பதிவில், ஆதரவற்ற குழந்தைகளுக்கு ஆதரவு கரம் நீட்ட, தாம் வேண்டுகோள் விடுத்திருந்ததாகவும், இதனை ஏற்று அறிவிப்பு வெளியிட்ட முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு, தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் ஓ. பன்னீர் செல்வம் குறிப்பிட்டுள்ளார்.

மருத்துவ பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை அறிவித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு ஏற்கனவே , ஓ. பன்னீர் செல்வம் நன்றி தெரிவித்திருந்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments