ஹரியானாவில் ஜூன் 7ஆம் தேதி வரை சில தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு

0 1283

ஹரியானாவில் ஜூன் 7ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைய தொடங்கியதையடுத்து கட்டுப்பாடுகளில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் மனோகர் லால் கத்தார் தெரிவித்துள்ளார். கடைகள் காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை திறக்க அனுமதியளிக்கப்பட்டுள்ள நிலையில் ஒற்றை - இரட்டைப்படை முறையை கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதாவது ஒற்றைப்படை எண்கள் கொண்ட கடைகள் ஒற்றை தேதியிலும் இரட்டைப்படை எண்கள் கொண்ட கடைகள் இரட்டைப்படை தேதியிலும் திறக்கலாம். மேலும், இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணிவரை இரவு ஊரடங்கு தொடரும் என்றும் கல்வி நிலையங்கள் வரும் 15ஆம் தேதி மூடப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments