கொரோனாவுக்கு பலியான தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு தாராளமான ஓய்வூதியம் வழங்கப்படும்: மத்திய அரசு

0 6869

கொரோனாவுக்கு பலியான தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு தாராளமான ஓய்வூதியம் வழங்கப்படும் என மத்திய அரசு உறுதி அளித்துள்ளது. 

குடும்பத்திற்கு வருமானம் ஈட்டும் நபர் கொரோனாவால் இறந்து விட்டால், அவர்களின் குடும்பத்தினருக்கு ESIC எனப்படும் தொழிலாளர் ஈட்டுறுதி கழகத்தின் ஓய்வூதியம், மரணித்த நபர் பெற்ற தின ஊதியத்தின் 90 சதவிகிதம் என்ற அளவுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொழிலாளர்களின் முதலீட்டுடன் இணைந்த காப்பீட்டு திட்டத்தின் பலன்களும் அதிகரிக்கப்பட்டு, இந்த குடும்பங்களுக்கு வழங்கப்படும். காப்பீட்டு பலன்கள் 6 லட்சத்தில் இருந்து 7 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டு, குறைந்தபட்ச காப்பீட்டு பலன் இரண்டரை லட்சம் ரூபாயாக நிச்சயிக்கப்பட்டுள்ளது. 

2020 பிப்ரவரி 15 ஆம் தேதி முதல் 3 ஆண்டுகளுக்கு இது நடைமுறையில் இருக்கும். இறப்பதற்கு முந்தைய 12 மாதங்களில் வேறு நிறுவனங்களுக்கு மாறிய பணியாளர்களின் குடும்பத்தினரும் இந்த பலனை பெறலாம். 2020 மார்ச் 24 ஆம் தேதி முதல் அடுத்த ஆண்டு மார்ச் 24 ஆம் தேதி வரையிலான கொரோனா உயிரிழப்புகளுக்கு இந்த சலுகைகள் பொருந்தும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments