கலைஞர் பிறந்த நாளில் பொதுவெளியில் நிகழ்ச்சி நடத்த வேண்டாம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

0 2013

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி ஊரடங்கு காலத்தில் பொதுவெளியில் நிகழ்ச்சி எதுவும் நடத்த வேண்டாம் எனத் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

அவர் தனது அறிக்கையில், மக்களின் உயிரைக் காப்பது ஒன்றே நம் முன் உள்ள தலையாய பணி என்றும், அதற்காக நம்மை முழுமையாக அர்ப்பணித்துச் செயலாற்றுவதே கலைஞரின் பிறந்தநாள் விழாவுக்குச் சிறப்பு சேர்ப்பதாகும் எனத் தெரிவித்துள்ளார்.

அவரவர் இல்லங்களில் கலைஞர் உருவப் படத்துக்கு மரியாதை செலுத்திக் கொண்டாடுங்கள் என வேண்டுகோள் விடுத்துள்ளார். ஊரடங்கில் ஏழை எளிய மக்களுக்கு அவர்களின் இருப்பிடம் சென்று உணவுப் பொருட்களை வழங்கிடுங்கள் என்றும், ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்பதே கலைஞர் பிறந்தநாள் விழாவுக்கான செயல்திட்டமாக அமையட்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments