சீக்கிரம் வந்துவிடுவேன்... கவலை படாதீங்க கண்டிப்பா கட்சியை சரிபண்ணிவிடலாம்!

0 9472

"கொரோனா முடிந்ததும் நான் வந்துவிடுவேன், கவலைப்படாதீர்கள். கண்டிப்பாக கட்சியை சரிசெய்துவிடலாம்’’ என்று தொண்டர் ஒருவருடன் சசிகலா பேசியதாக வெளியாகியுள்ள தொலைபேசி உரையாடல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் தண்டனை அனுபவித்து வந்த சசிகலா, கடந்த ஜனவரி மாதம் விடுவிக்கப்பட்டார். அவர் வெளிவந்த பின் தமிழக அரசியல் சூழலில் பல்வேறு மாற்றங்கள் நிகழும் என எதிர்பார்க்கப்பட்டது.

சிறையில் இருந்து வெளிவந்த நாளன்று, அரசியலில் தொடர்ந்து பணியாற்றப்போவதாக சசிகலா தெரிவித்தார். அதிமுகவை சசிகலா கைப்பற்றுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சசிகலாவை சேர்த்துக்கொள்ளமாட்டோம் என அதிமுக நிர்வாகிகள் தெரிவித்துவிட்டனர்.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வந்த சூழலில், அரசியலில் இருந்து ஒதுங்கி இருப்பதாக சசிகலா தெரிவித்தார். தேர்தலில் திமுக வெற்றிபெற்று ஆட்சி அமைத்துவிட்டது. இந்நிலையில், மீண்டும் அரசியலில் களமிறங்கப்போவதாக சசிகலா சிக்னல் கொடுத்துள்ளார்.

இந்நிலையில், கட்சித்தொண்டர் ஒருவரிடம் சசிகலா தொலைபேசியில் பேசியதாக ஆடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதில் வீட்டில் எல்லோரும் நல்லா இருக்கிறீர்களா? நான் சீக்கிரம் வந்துவிடுவேன். ஒன்றும் கவலைப்படாதீர்கள் கண்டிப்பாக கட்சியை சரிபண்ணிவிடலாம். கொரோனா முடிந்ததும் நான் வந்துவிடுவேன். எல்லோரும் ஜாக்கிரதையாக இருங்கள் . நிச்சயம் நான் வந்துவிடுவேன் என்று அந்த தொலைபேசி உரையாடலில் அவர் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக தோல்வியடைந்து எதிர்க்கட்சியாக உள்ள நிலையில், சசிகலாவின் உரையாடல் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments