கோவையில் ஊரடங்கை மீறி தடையின்றி இயங்கும் தொழிற்சாலைகள்... கொரோனா அதிகரிக்க காரணமா.?

0 25309

கோவையில் கடந்த 3  நாட்களை ஒப்பிடுகையில் சனிக்கிழமை கொரோனா பாதிப்புகுள்ளானவர்களின் எண்ணிக்கை சற்று குறைந்துள்ள நிலையில் ஊரடங்கை மீறி அத்தியாவசியமில்லாத சில தொழிற்சாலைகள் இயங்குவது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

தமிழகத்தில் தினமும் கொரோனா பாதிப்புக்குள்ளாவோர் எண்ணிக்கையில் சென்னையை பின்னுக்கு தள்ளி கோவையில் தான் அதிகரித்து வருகின்றது. அந்தவகையில் சனிக்கிழமை 3692 பேர் கோவையில் பாதிப்புக்குள்ளாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவையில் கடந்த 3 தினங்களாக தினமும் கொரோனா பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டிய நிலையில் சனிக்கிழமை குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டாலும், அரசின் ஊரடங்கு உத்தரவை மீறி பணியாளர்களை பணிக்கு அழைத்துச்செல்லும் தனியார் தொழிற்சாலைகளால் கொரோனா பரவல் அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

கோவையில் பெரும்பான்மையான மக்கள் ஊரடங்கை மதித்து வீட்டுக்குள் அடக்கி இருக்கும் நிலையில், நகருக்குள் சில நிறுவனங்கள் ரகசியமாக இயங்கி வருகின்றது. புறநகர் பகுதிகளான நீலம்பூர், அரசூர்,தெக்கலூர், கருமத்தம்பட்டி ஆகிய இடங்களில் பல தொழிற்சாலைகள் இயக்கப்படுவதாக அங்குள்ள தொழிலாளர்களே புகார் தெரிவித்துள்ளனர்.

அந்தவகையில் கோவை நீலம்பூர் பகுதியில் உள்ள சாம் டர்போ இன்டஸ்ட்ரீஸ், லட்சுமி மெஷின் ஒர்க்ஸ், கிராப்ட்ஸ் மென் தொழிற்சாலைகள் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுடன் எந்தவித தடையுமின்றி இயங்குகின்றது.

இந்த தொழிற்சாலைகள் தங்கள் தொழிலாளர்களை பேருந்து மூலம் சமூக இடைவெளியின்றி அழைத்து வருவதால் அவர்களுக்குள் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் சில தொழிலாளர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அதே போல சோமனூர் சுற்றுவட்டார பகுதிகளில் விசைத்தறிக் கூடங்கள் இரு நபர்களை வைத்து இடக்கப்பட்டு வருவதாக கூறப்படுகின்றது.

ஊரடங்கை அமல்படுத்த வேண்டிய அரசு அதிகாரிகள், அத்தியாவசியமில்லாமல் இயங்கும் தொழிற்சாலைகளை திரந்து வைத்திருக்கும் முதலாளிகளுக்கு தக்க அறிவுறுத்தலை வழங்கி தொழிலாளர்களின் உடல் நலனை பாதுகாப்பது அவசியம்.

அதே நேரத்தில் தமிழக அரசின் இரு வார ஊரடங்கு கட்டுப்பாடுகளை பின்பற்றினால் கொரோனா பரவல் சங்கிலியை உடைத்து மீண்டும் இயல்பு வாழக்கைக்கு திரும்ப இயலும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments