புதுச்சேரியில் ஊரடங்கு மேலும் ஒரு வார காலத்திற்கு நீட்டிப்பு..!

0 14695
புதுச்சேரியில் ஜூன் 7ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டித்து ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உத்தரவிட்டுள்ளார்.

புதுச்சேரியில் ஜூன் 7ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டித்து ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உத்தரவிட்டுள்ளார். 

ஏற்கனவே நடைமுறையில் உள்ள ஊரடங்கில், காலை 12 மணிவரை அத்தியாவசிய கடைகளான காய்கறி, பழங்கள், மளிகை கடை உள்ளிட்டவற்றுக்கு அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. தற்போது வாகனங்களை பழுது பார்ப்போருக்கும் 12 மணி வரை அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வெளியே வரக்கூடாது என்றும் அத்தியாவசிய பொருட்களை அருகே உள்ள கடைகளில் வாங்கிக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதேபோன்று பால் விற்பனை நிலையங்கள்,  பெட்ரோல் பங்குகள், மருந்து விற்பனையகங்கள் 24 மணி நேரமும் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments