முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவின் மனைவி பரமேஸ்வரி காலமானார்

0 7729

திமுக துணைப் பொதுச்செயலாளரும், எம்.பி.யுமான ஆ.ராசாவின் மனைவி பரமேஸ்வரி, உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 53. 

கடந்த 6 மாதங்களாக புற்று நோயுடன் போராடி வந்த பரமேஸ்வரி, குரோம்பேட்டையில் உள்ள டாக்டர் ரெலா மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.

செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு, மருத்துவர்களும், புற்று நோயியியல் துறை நிபுணர்களும் தீவிரமாக கண்காணித்து, சிகிச்சை அளிந்து வந்தனர். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி, இரவு 7.05 மணிக்கு உயிர் பிரிந்தது.

திமுக துணைப்பொதுச்செயலாளர் ஆ.ராசாவின் மனைவி மறைவுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments