தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு சரிவு : கொரோனா தொற்று பாதிப்பிலிருந்து 31,759 பேர் டிஸ்சார்ஜ்

0 4303

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து சரிவை சந்திக்க, குணம் அடைந்து வீடு திரும்புவோரின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது.

கோவையில் கடந்த 4 நாட்களை ஒப்பிடும் போது, வைரஸ் தொற்று பாதிப்பு சற்று குறைந்துள்ளது.தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 30 ஆயிரத்து 016 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி ஆகி உள்ளது. ஒரே நாளில் பெருந்தொற்றில் இருந்து 31 ஆயிரத்து 759 பேர் குணம் அடைந்து, வீடு திரும்பி உள்ளனர்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில்  தமிழகம் முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 486  பேர் உயிரிழந்துள்ளனர்.

கோவையில் 3 ஆயிரத்து 692 பேருக்கும், சென்னையில் 2ஆயிரத்து 705 பேருக்கும், திருப்பூரில் ஆயிரத்து 697 பேருக்கும், ஈரோட்டில் ஆயிரத்து 743 பேருக்க செங்கல் பட்டில் ஆயிரத்து 314 பேரும், திருச்சியில் ஆயிரத்து 297 பேருக்கும், திருவள்ளூரில் ஆயிரத்து 72 பேருக்கும், மதுரையில் 828 பேருக்கும்,  புதிதாக கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் தற்போது 3 லட்சத்து 10 ஆயிரத்து 157 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments