கோவையில் கொரோனா பாதிப்பு தடுப்புப் பணிகள் தீவிரம்... முதலமைச்சர் நேரில் ஆய்வு

0 3060

மிழகத்தில் கொரோனா பாதிப்பில் தொடர்ந்து மூன்று நாட்களாகக் கோயம்புத்தூர் மாவட்டம் முதலிடத்தில் உள்ள நிலையில், அங்குக் கொரோனா தடுப்புப் பணிகளை விரைவுபடுத்துவதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஞாயிற்றுக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.

தமிழகத்தில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் தான் ஒரு நாளில் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. வியாழனன்று 4,734 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், நேற்று இந்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 937 ஆகக் குறைந்துள்ளது.

எனினும் தமிழகத்தில் மற்ற மாவட்டங்களை விட கொரோனா பரவலில் கோயம்புத்தூர் மாவட்டமே முதலிடத்தில் உள்ளது. வீட்டில் தனிமைப் படுத்திக் கொண்டவர்கள் உட்பட 38 ஆயிரத்து 336 பேர் தற்போது வரை கொரோனா தொற்றுக்குச் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் புதிதாகச் சிகிச்சை மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் 199 சாதாரணப் படுக்கைகளில் 159 படுக்கைகள் நிரம்பியுள்ளன. 40 படுக்கைகள் காலியாக உள்ளன.

ஆக்சிஜன் வசதிகொண்ட 747 படுக்கைகளில் 679 படுக்கைகள் நிரம்பி உள்ளன. 62 படுக்கைகள் காலியாக உள்ளன. தீவிரச் சிகிச்சைப் பிரிவில் உள்ள 40 படுக்கைகளும் முழுவதுமாக நிரம்பியுள்ளன.

கோயம்புத்தூர் அரசு கலைக்கல்லூரியில் 200 ஆக்சிஜன் வசதி படுக்கைகளுடன் கூடிய கொரோனா சிகிச்சை மையம் செயல்படத் தொடங்கியதை அடுத்து, அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

ஊர்ப்புறங்களிலும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் 60 படுக்கை வசதி கொண்ட கொரானோ சிகிச்சை மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவற்றில் 30 படுக்கைகள் ஆக்சிஜன் வசதியுடன் கூடியவையாகும்.

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள கொரோனா கட்டுப்பாட்டு அறையைப் பார்வையிட்ட அமைச்சர்கள் சக்கரபாணி, ராமச்சந்திரன் ஆகியோர் பொதுமக்களின் அழைப்புகளுக்குப் பதிலளித்து நம்பிக்கையூட்டினர். உதவி கேட்பவர்களுக்குத் தேவையானவற்றை உடனடியாகச் செய்து தரும்படி மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர். கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்த ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சக்கரபாணி, கோவை மாநகராட்சியில் மக்கள் தொகை 18 லட்சம் என்பதால் அவர்களுக்குத் தேவைகளான காய்கறிகள், பழங்கள் வீடு தேடிக் கொண்டு செல்வதற்கான பணிகள் மேற்கொள்ளபட்டு வருவதாகத் தெரிவித்தார்.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை விரைவுபடுத்தவும், கொரோனா கட்டுப்பாடு குறித்து மருத்துவர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை அங்குச் செல்கிறார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments