கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் - பிரதமர் நரேந்திர மோடி

0 3776

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு பி.எம் கேர்ஸ் நிதியிலிருந்து 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். 

பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கொரோனாவால் பெற்றோர் அல்லது பாதுகாவலரை இழந்த குழந்தைகளின் வங்கிக் கணக்கில் 10 லட்சம் ரூபாய் வைப்பு நிதியாக வைக்கப்படும் என்றும் 18 வயதுக்கு பிறகு மாத ஊக்கத்தொகை அந்த வைப்பு நிதியில் இருந்து வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வைப்பு தொகையை 23வது வயதில் முதிர்வுத் தொகையாக பெறலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் குழந்தைகளுக்கு கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் இலவச கல்வி வழங்கப்படும், தனியார் பள்ளியில் படித்தால் அரசின் விதிமுறைகளுக்கு ஏற்ப பிஎம் கேர் நிதியில் இருந்து கல்விக் கட்டணம் செலுத்தப்படும், புத்தகங்கள், பள்ளி உடைகள் செலவையும் மத்திய அரசே ஏற்கும் என்பன உள்ளிட்ட அறிவிப்புகளும் அதில் இடம்பெற்றுள்ளன. 

உயர்கல்விக்காக வங்கிகளில் கடன் பெற்றால் அதற்கான வட்டி, பிஎம் கேர்ஸ் நிதியில் இருந்து செலுத்தப்படும் என்றும் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின்கீழ் 5 லட்ச ரூபாய்க்கான மருத்துவ காப்பீடு வழங்கப்படுவதோடு, அதற்கான பிரிமியம் தொகையை 18 வயது வரை பிஎம் கேர்ஸ் செலுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments